கொழும்பில் பணத்திற்காக பெண்களை விற்பனை செய்யும் நிலையம் சுற்றிவளைப்பு
கல்கிஸ்ஸ - காசியா மாவத்தையில் ஆயுர்வேத நிலையம் என்ற போர்வையில் பெண் ஒருவரால் நடத்தப்பட்டு வந்த பெண்களை பணத்திற்காக விற்பனை செய்யும் நிலையமொன்றை குற்றப்புலனாய்வு பிரிவினர் சுற்றிவளைத்துள்ளனர்.
ஆயுர்வேத மையம் ஒன்றின் விளம்பரப் பலகைகள் இயங்கி வந்த போதிலும், அந்த இடத்தில் வைத்தியர் எவரும் தங்கவில்லை என பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பொலிஸார் விசாரணை
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தாங்கள் கொழும்பு பிரதேசத்தில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருவதாக வீடுகளுக்கு கூறியதாகவும், இந்த இடத்தில் தங்கி தொழிலில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் 25 வயதுக்கும் 37 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும், இவர்கள் பாணந்துறை எல்பிட்டிய, நிட்டம்புவ கடமுலாவ மற்றும் பொலன்னறுவை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
