கொழும்பில் இளம் பெண்ணை நேர்காணலுக்கு அழைத்து கோடீஸ்வரர் செய்த மோசமான செயல்
அதிக சம்பளம் தருவதாக கூறி நேர்காணலுக்கு அழைக்கப்பட்ட திருமணமான இளம் பெண்ணை தவறான நடத்தைக்கு உட்படுத்தியதாக கூறப்படும் கோடீஸ்வர வர்த்தகர் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கொள்ளுப்பிட்டி பொலிஸார் நேற்று (08) கோட்டை நீதவான் கோசல சேனாதீரவிடம் இதனை அறிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு தேவையான தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகளை விசாரணை அதிகாரிகளுக்கு வழங்குமாறு தொலைபேசி நிறுவனங்களுக்கு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பொலிஸார் வெளியிட்ட தகவல்
குறித்த வர்த்தகர் வாட்ஸ்அப் மூலம் முறைப்பாடு செய்தவரை அடையாளம் கண்டுகொண்டதாகவும், நேர்முகப்பரீட்சைக்கு வருமாறு அறிவித்ததன் பிரகாரம், திருமணமான இளம் பெண் தனது கணவருடன் கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடொன்றுக்கு சென்றுள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்திருந்தனர்.
இதன்போது இளம் பெண்ணின் கணவரை கீழே தடுத்து வைத்துவிட்டு மேல்மாடி அறைக்கு அழைத்துச் சென்று மேற்படி குற்றத்தை செய்துள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ப்ரமோஷன் நிகழ்வில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி! படுவைரலாகும் வீடியோ Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் ஸ்டாலின்-நிரோஷா நடிக்கும் புதிய சீரியல்... வெளிவந்த புரொமோ Cineulagam