ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை விற்பனை செய்வது தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் கீழ் உருவாக்கப்பட்ட தேசிய விமான சேவையான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸினை விற்பனை செய்யும் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அரச நிறுவனம்
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய தலைவர் சரத் கனேகொடவின் தலையீட்டின் பேரில் விமான சேவை தொடர்பில் ஏனைய நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில, தற்போது, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பங்குகளை தனியார் மயமாக்கும் மற்றும் விற்பனை செய்யும் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையை அரச நிறுவனமாக தொடர்ந்து இயங்குவதை உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், அதன் விற்பனை அல்லது தனியார் மயமாக்கலை தடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |