பொய்யுரைத்த ஜனாதிபதி : அநுரவே ஏற்றுக் கொண்டதாக செஹான் அறிவிப்பு
குறுகிய அரசியல் வெற்றிக்காக தான் பொய்யுரைத்ததை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) பகிரங்கமாக ஏற்றுக் கொண்டுள்ளார் என முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் பகுதியில் இன்று (27) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார நெருக்கடி
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுத்தோம் என்று குறிப்பிடும் தார்மீக உரிமை ஜனாதிபதிக்கும், அரசாங்கத்துக்கும் கிடையாது.
சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டத்தை எவ்வித மாற்றமுமில்லாமல் முன்னெடுப்பதாக குறிப்பிடும் ஜனாதிபதி கடந்த காலங்களில் நாணய நிதியத்தின் செயற்திட்டத்துக்கு முழுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.
நாணய நிதியத்தின் செயற்திட்டம்
நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் கொழும்புக்கு வருகை தந்த போது நிதியமைச்சின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தினார்.
பொருளாதார மீட்சிக்கான நாணய நிதியத்தின் செயற்திட்டத்தை முழுமையாக செயற்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளமை வரவேற்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.
You May Like This
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri
