முல்லைத்தீவில் அடாத்தாக பிடிக்கப்பட்ட பாடசாலை காணி: போராட்டத்தில் குதித்த மக்கள்
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பூதன்வயல் கிராமத்தில் தண்ணிமுறிப்பு பாடசாலை இயங்கிய காணியை தனியார் ஒருவர் அடாத்தாக பிடித்து வைத்திருப்பதால் காணியை மீட்டுத்தரக்கோரி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் இன்றையதினம்(27.01.2025) காலை இடம்பெற்றுள்ளது.
யுத்த காலத்துக்கு முன்னர் நீண்டகாலமாக குறித்த காணியில் பாடசாலை இயங்கி வந்துள்ளது. யுத்தம் நிறைவடைந்து மீள்குடியேற்றத்தின் போது தனியார் ஒருவர் இந்த காணியினை சுவீகரித்து பாடசாலை அடையாளங்களை அழித்து வீடு ஒன்றை அமைத்துள்ளார்.
போராட்டக்காரர்களின் எச்சரிக்கை
அப்போதைய அரசியல் சூழல் காரணமாக போராடி குறித்த காணியை பெற்றுக்கொள்ளமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது உரிய முறைப்படி பிரதேச செயலக அதிகாரிகளை அணுகி அவர்கள் ஊடாகவும் குறித்த தனிநபரை வெளியேற்ற முடியாத நிலையில், ஊர் மக்கள், பாடசாலை சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த பாடசாலை பூதன் வயல் பொது நோக்குமண்டபத்தில், மரங்களுக்கு கீழ் 53 மாணவர்களுடன் வசதிகளற்ற நிலையில் இயங்கி வருகின்றது.
போராட்டத்திற்கான தீர்வுகள் கிடைக்கப் பெறாத நிலையில், பாடசாலை செல்லும் மாணவர்களை இடைநிறுத்தி மாணவர்களுடன் போராட்டத்தில் ஈடுபடுவோம் என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |














6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 4 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
