யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி விவகாரம் : மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள கோரிக்கை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி ரகுராம் எந்த அடிப்படையில் அந்த பதவியில் இருந்து விலகினாரோ அந்த விடயத்துக்காக உயர்ந்த கௌரவத்தோடு மீளவும் கலைப்பீட பீடாதிபதியாக நியமிக்கப்பட வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம், யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று (26) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் மனோகரன் சோமபாலன் இதனை தெரிவித்துள்ளார்.
ஒழுக்காற்றுச் சபையினது தண்டனை
மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட பேரவை கூட்டம், கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராமின் பதவி விலகல் என்பதை தொடர்ந்து பல்வேறு தகவல்கள் வெளியாகும் நிலையில் குறித்த விடயம் தொடர்பில் இந்த ஊடக சந்திப்பை நடத்துகிறோம்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சில மாணவர்கள் போதைப்பொருள் மற்றும் மதுபானங்களை நுகர்ந்து பரமேஸ்வரன் ஆலயம் பொங்குதமிழ் தூபி முன்பாகவும் முச்சக்கர வண்டிகள் சகதிம் நின்று ஏனைய மாணவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்ட வேளை கலைப்பீட பீடாதிபதி, சட்ட நிறைவேற்று அதிகாரி, பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் என்பவர்களால் அவதானிக்கப்பட்டது.
இந்நிலையில் மேற்படி உத்தியோகத்தர்களிடம் குறித்த மாணவர் குழு தகாத வார்த்தைகளில் முரண்பட்டார்கள் என்ற அடிப்படையில், குறித்த மாணவர்கள் மீது முறைப்பாடு முன் வைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து பேரவை என்ற முறையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
ஒழுக்காற்றுச் சபையானது குறித்த மாணவர்களுக்கு குறித்த காலப்பகுதிக்கான தண்டனையை வழங்கியிருந்ததாகவும் பேரவை அதனை கேள்விக்குட்படுத்தி பொது மன்னிப்பு வழங்கியதாகவும் அறிவிக்கப்பட்டது.
பாதுகாப்பையும் கருத்திற்கொண்டு...
போதைவஸ்து பாவனை, மதுபான பாவனை என்பன தினமும் இடம்பெற்று வந்த அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என சொல்லப்பட்டது.
யாழ்ப்பான பல்கலைக்கழக பரமேஸ்வரா ஆலயத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பு காணப்படுகின்ற சில தடயங்கள் இங்கு போதைப்பொருள் பாவனைகள் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று எண்ணத்தை எங்களுக்கு ஏற்படுத்துகின்றது.
மேற்படி விடயம் தொடர்பாக குறித்த மாணவர்கள் கல்லாசனம் அகற்றப்பட்டதையும் அதன் விளைவாக அதனை விமர்சித்ததன் காரணத்தாலே பழிவாங்கப்பட்டோம் என்ற விடயத்தையும் சொல்லி இருந்தனர்.
நான் எட்டு பேருக்கு மட்டும் கலைப்பீட மாணவ பிரதிநிதி அல்ல. 3500 மாணவர்களுக்கான தலைவராகவே நான் உள்ளேன். சகலரின் கருத்தையும் கேட்க வேண்டும். அவர்களின் பாதுகாப்பையும் கருத்திற்கொண்டு செயல்பட வேண்டும்.
போராட்டம் தொடர்பான அறிவிப்பு
தற்போது ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு தண்டனை விலக்களிக்க முடியும் என்றால் இதுவரை பல்கலைக்கழகத்தினால் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்ட மாணவர்களுக்கு என்ன பதிலை பேரவையும் பல்கலைக்கழகமும் சொல்லப்போகின்றது.
எந்த தவறிழைத்தாலும் உண்ணாவிரதம் செய்தால் வகுப்பு தடையை விடுத்து உள்ளே வரலாம் என்ற முன்னுதாரணத்தை இந்த பேரவை மேற்கொண்டிருந்தால் என்ன செய்யும் என்ற கேள்வியை நான் எழுப்புகிறேன்.
பண்பாட்டு அடையாளம், தமிழ் தேசியத்தின் இருதயநாதம் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இவ்வாறான போதைப்பொருள் தொடர்பான செயல்களை அனுமதிக்கின்றது என்பதை இந்த நிர்வாகம் சமூகத்திற்கு சொல்ல வருகின்றது.
மேலும், கலைப்பீட மாணவர் ஒன்றியம் மீளவும் பீடாதிபதியாக ரகுராம் நியமிக்கப்படும்வரை சாத்வீக ரீதியான போராட்டத்தை முன்னெடுக்கும். போராட்டம் தொடர்பான அறிவிப்பு உத்தியோகபூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புதிய சாதனை படைத்த அனிருத்தின் சென்னை இசை நிகழ்ச்சி.. 45 நிமிடத்திற்குள் அனிருத்தின் #Hukum புதிய சாதனை Cineulagam
