கூடுதல் விலைக்கு அரிசி விற்பனை செய்த 100 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு
கூடுதல் விலைக்கு அரிசி விற்பனை செய்த 100 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தொடர நடவடிக்கை எடுத்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
135 நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு
அதே போன்று கடந்த ஒரு மாத காலத்திற்குள்ளாக அவ்வாறான மேலும் 135 நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
கூடுதல் விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நுகர்வோர் விவகார சபை அண்மைக்காலமாக திடீர் சோதனைகளை அதிகரித்துள்ளது.
அதிகாரிகளின் சோதனை
அதன் மூலமாக கடந்த ஒரு மாத காலத்திற்குள் மட்டும் சுமார் இருநூற்றி ஐம்பது வர்த்தக நிலையங்கள் அதிகாரிகளின் சோதனையில் சிக்கிக் கொண்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
அதே போன்று கூடுதலான அளவில் அரிசியைப் பதுக்கி வைத்துள்ள நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அவ்வாறு பதுக்கி வைக்கப்பட்ட நிலையில் கைப்பற்றப்படும் அரிசியை அரசுடைமையாக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



