வவுனியா நகரம் வடக்கிற்கான வட்டார சபை தெரிவு
வவுனியா நகரம் வடக்கிற்கான வட்டார சபை தெரிவு இன்று இடம்பெற்றது.
வவுனியா, பூந்தோட்டம் பொது நோக்கு மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
கல்வி, உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வட்டார சபையின் தலைவராக கோணேஸ்வரலிங்கம் தெரிவு செய்யப்பட்டார்.
செயலாளராக கிறிஸ்ரலாவும் உறுப்பினர்களாக கிருபாநிதி, றயிந்தன், சுகுமார், நற்குணசீலி, ரஜனி, சுப்பிரமணியம், ஶ்ரீரஞ்சன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து அமைச்சருடனான பொதுமக்கள் சந்திப்பும் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் வவுனியா மாநகரசபை உறுப்பினர்களான க.கிருஸ்ணதாஸ், சு.விஜயகுமார், மற்றும் தேசியமக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.