கைதிகளிடம் இருந்து ஐந்து சிம் அட்டைகளை கைப்பற்றிய அதிரடிப்படையினர்: இருவர் கைது
ஐந்து 4 ஜீ ரக சிம் அட்டைகள், மெம்மறி அட்டை மற்றும் லைட்டர் என்பவற்றை மறைத்து வைத்திருந்த இரண்டு கைதிகளை விசேட அதிரடிப்படையினர் வெலிகடை சிறைச்சாலையில் கைது செய்துள்ளனர்.
43 மற்றும் 24 வயதான இந்த கைதிகள் மொரட்டுவை தாலமுல்ல மற்றும் பொரள்ளை சீவலி ஒழுங்கை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அதிரடிப்படையினர் கூறியுள்ளனர்.
வெலிகடை சிறைச்சாலை கட்டடத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிரடிப்படையின் அதிகாரிகள்,கைதிகளை சோதனையிட்ட போது, மொரட்டுவையை சேர்ந்த கைதியிடம் இருந்து சிம் அட்டைகளும், மெம்மறி அட்டையும் கைப்பற்றப்பட்டதுடன் மற்றைய கைதியிடம் இருந்து லைட்டர் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட கைதிகள், கைப்பற்றிய பொருட்களுடன் சிறைச்சாலை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.