கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளம் பெண்: விசாரணையில் வெளியான காரணம்
சீதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முத்துவாடிய பகுதியில் வாடகை அறையொன்றில் பெண் ஒருவரின் சடலம் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்த பெண் பலுகொல்லாகம, மெகொடவெவ பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடையவர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இரண்டு குழந்தைகளுக்கு தாயான இவர், முதல் திருமணத்தில் இருந்து பிரிந்து தனது 22 வயதுடைய இரண்டாவது கணவருடன் வாடகை அறையில் வசித்து வந்த நிலையில் நேற்றிரவு இந்த கொலை இடம்பெற்றுள்ளது.
கொலைக்கான காரணம்
குறித்த பெண்ணின் இரண்டாவது கணவரே இக்கொலையை செய்துள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் அறைக்கு வந்தபோது வேறு ஒரு ஆணின் பணப்பை இருந்ததாகவும், அதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு போத்தல் மூடியால் பெண்ணின் கழுத்தை அறுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் தற்போது பிரதேசத்தை விட்டு தப்பிச்சென்றுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |