ஹோர்முஸ் நீரிணையில் வெடித்து சிதறிய கப்பல்! மீறினால் தீயில் சிக்குவீர்கள்.. ஈரானின் கடும் எச்சரிக்கை
அங்கீகரிக்கப்படாத மற்றும் ஆபத்தான பாதையைப் பயன்படுத்தி ஹோர்முஸ் நீரிணையிலிருந்து வெளியேற முயன்ற கச்சா எண்ணெய் தாங்கிக் கப்பலொன்று கடற்படைக் கண்ணிவெடியில் சிக்கி வெடித்துத் தீப்பற்றியதாக ஈரானிலுள்ள செய்தி நிறுவனமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) வெளியிட்ட அறிக்கையில், குறித்த எண்ணெய்க் கப்பல் ஹோர்முஸ் நீரிணையிலிருந்து வெளியேற முயன்றபோது, அதன் வழிசெலுத்தல் மற்றும் உலகளாவிய இருப்பிடக் கண்டறிதல் (GPS) அமைப்புகளைச் செயலிழக்கச் செய்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை
இதன்போதே அது கடற்படைக் கண்ணிவெடியில் சிக்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கப்பலில் ஏற்பட்ட தீ மிகப்பெரிய அளவில் பரவியிருந்ததாகவும், கணிசமான தொலைவில் உள்ள கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள்கூட தீப்பிழம்புகளைக் காண முடிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Massive Oil Tanker Hits Iran's Naval Mine Near Strait of Hormuz, ENGULFED IN FLAMES Public Relations Department of the IRGC: A large, rogue oil tanker carrying crude oil, attempting to leave a restricted area near the Strait of Hormuz, suffered a massive explosion after colliding with a naval mine in a declared hazardous area. This massive tanker, which had its navigation and positioning systems disabled, is currently engulfed in a huge fire following the collision with the naval mine, with the flames clearly visible to people living along the coast.
— Ryan Rozbiani (@RyanRozbiani) October 10, 2026
“ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பு விதிமுறைகளைப் புறக்கணிக்கும் எண்ணெய்த் தாங்கிக் கப்பல்களுக்கு மிகப்பெரிய தீ காத்திருக்கிறது” என IRGC எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், அனுமதியற்ற கடல் வழிகளைப் பயன்படுத்தும் கப்பல்களுக்கு எதிரான நடவடிக்கைகள் இனி ஹோர்முஸ் நீரிணையுடன் மட்டுப்படுத்தப்படாது என்றும், முழுப் பிராந்தியத்திலும் அவை பின்தொடரப்பட்டு தண்டிக்கப்படும் என்றும் ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
முன்னெடுத்துவரும் தாக்குதல்கள்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்துவரும் தாக்குதல்கள் ஆரம்பமானதிலிருந்து ஹோர்முஸ் நீரிணை முழுமையாகத் தமது ஆயுதப் படைகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாக ஈரான் கூறியுள்ளது.
தற்போதைய போர் நிலைமை காரணமாக இந்த நீரிணை வழியாக இடம்பெறும் வர்த்தகக் கப்பல் போக்குவரத்தும் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.
🚨 Iran's Revolutionary Guard releases footage of a giant oil tanker burning after hitting a "naval mine" for "violating" Strait of Hormuz routes and "turning off its tracker." The tanker, carrying crude oil, attempted to "exit the Strait of Hormuz via an unauthorized route." Tehran warns: "This horrific fire is the fate of any tanker that exceeds the Strait's sovereign laws." https://t.co/cam6KCG9ci
— Russia RX (@Russia_RX24) October 10, 2026
கப்பல்களின் இயக்கம் ஒற்றை இலக்க எண்ணிக்கைக்குச் சரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்கா தமது கோரிக்கைகளை நிறைவேற்றி, ஈரானின் நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் வரை ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கப்போவதில்லை என தெஹ்ரான் அறிவித்துள்ளது.
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை
இதற்கிடையில், அமெரிக்கா ஏற்கனவே இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோதும் இரண்டு முறை தாக்குதல்களை நடத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான், பேச்சுவார்த்தை மேசையிலிருந்து தமது நாடு விலகப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

துர்க்மெனிஸ்தானின் துர்க்மென்பாஷி நகரில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினைச் சந்தித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். “நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
இருப்பினும், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் ஒவ்வொரு முறையும் அவர்கள் மீண்டும் தாக்குதல் நடத்துகின்றனர்.
இருந்தபோதிலும், பேச்சுவார்த்தை மேசையிலிருந்தும் கலந்துரையாடலிலிருந்தும் நாங்கள் விலகப்போவதில்லை” என பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார். ஈரான் ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஏபி டிவில்லியர்ஸ் டக்அவுட்: 42 வயது வீரரின் சிக்ஸர்மழை..தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் வெற்றி News Lankasri