வெளிநாடொன்றில் அகதிகள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்து: 109 பேர் பலி! பலர் மாயம்
ஆபிரிக்க நாடான ஜிபூட்டி கடற்கரைப் பகுதியில் புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு ஒன்று நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 15 சிறுவர்கள் உட்பட 109 பேர் உயிரிழந்துள்ளதுடன் 116-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாக சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பு (IOM) தகவல் தெரிவித்துள்ளது.
ஜிபூட்டியில் இருந்து ஏமன் நாட்டை நோக்கிப் புறப்பட்ட இந்தப் படகு, ஓபோக் நகரின் குஹேரே பகுதி அருகே கடலில் சென்றபோது கவிழ்ந்து மூழ்கியது.
இதில் படகில் பயணித்த எத்தியோப்பிய நாட்டைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்டோர் நீந்தி உயிர் தப்பிய நிலையில், அவர்களில் 64 பேருக்கு ஓபோக் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
தேடுதல் பணி
இந்த விபத்தில் இதுவரை 109 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மாயமான 116 பேரைக் கண்டறிய ஜிபூட்டி கடற்படையினர் மற்றும் மீட்புக் குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.

வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்புகளைத் தேடி ஆபிரிக்காவின் கொம்புப் பகுதியிலிருந்து பப் அல்-மந்தேப் நீரிணை வழியாக ஏமனுக்குச் செல்லும் கடல் வழிப்பாதையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
அவசரநிலையை பிரகடனப்படுத்தி அதிகாரத்தை இடைநிறுத்திய பாகிஸ்தான் ஜனாதிபதி- திடீர் முடிவால் வெடித்த சர்ச்சை
பரபரப்பாகும் சவூதி விமான நிலைய தாக்குதல்! 12 பேர் பலி - பலரின் நிலைமை கவலைக்கிடம்: மூடப்படும் வான்வெளிகள்