உருவ அமைப்பினாலேயே தனது பேச்சை யாரும் கேட்பதில்லை: சீமான் ஆதங்கம்
தாம் கறுப்பாக, குள்ளமாக இருப்பதன் காரணமாகவே தமது பேச்சை, யாரும் கேட்பது இல்லை என்று நாம் தமிழர் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாசரத்திற்காக நேற்று(08) விழுப்புரத்தில் உரையாற்றிய போதே, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மாறாக தாம், வெள்ளையாக இருந்து, ஆங்கிலத்தில் பேசி இருந்தால் மக்கள் கேட்டிருப்பார்கள் என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.
வாக்களிக்க மறுப்பவர்கள்
நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்காதவர்கள் மீது வருத்தம் தாம் கோபப்படுவது கிடையாது,
எனினும், அவர்களை பார்க்கும்போது பாவமாக இருக்கும். ஏனென்றால், தமக்கு வாக்களிக்க மறுப்பவர்கள் தனது உறவினர்களே என்று சீமான் குறிப்பிட்டுள்ளார்.
எதனையும் விட்டுத்தான் பிடிக்க வேண்டும். பொறுமை மிக அவசியம். கத்திரிக்காய் காய்த்து வரவே குறைந்தது 60 நாள் காத்திருக்க வேண்டியிருக்கிறது.
இந்நிலையில், ஒரு கொள்கையை விதைத்து, 60 ஆண்டு குப்பையை வெறும் 5 ஆண்டுகளில் அகற்றுவது சிரமம் என்றும் தமக்கு வாக்களிக்காதவர்கள் நிச்சயம் ஒருநாள் வெட்கப்படுவார்கள் என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |