பெரியாரை இகழ்ந்து பேசிய சீமானுக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்புகள்
தந்தை பெரியார் பெண்ணுரிமைக்காக போராடவில்லை என்றும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனே பெண்ணுரிமைக்காக போராடியதாகவும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி வருவதற்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.
தமிழ்நாட்டில் தந்தை பெரியார் குறித்து தொடர்ந்து அவதூறாக பேசி வருகிறார் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றன.
அதிருப்தி
இது தொடர்பில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் சீமான் மீது தொடர்ந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
இதுவரை சுமார் 70 பொலிஸ் நிலையங்களில் சீமானுக்கு எதிராக முறைப்பாடுகள் பதிவாகி இருக்கின்றன.
அத்துடன் சீமானின் இந்தப் பேச்சால் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளும் அதிருப்தி அடைந்து அக்கட்சியை விட்டு வெளியே வருகின்றனர் என்று தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.