இராணுவத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு கோரி துண்டுபிரசுரம் விநியோகம்
யாழ்ப்பாணம் - வடமராட்சி பருத்தித்துறை நகரிலுள்ள நீதிமன்றம், தபாலகம் ஆகியவற்றிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என கோரி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் எதிர்வரும் 11.09.2026 அன்று இடம்பெறவுள்ள குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு கோரும் நடவடிக்கையில் பருத்தித்துறை நகர பிதா விசன்ட் டீ போல் டக்ளஸ் போல் தலைமையிலான குழுவினர் ஈடுபட்டிருந்தனர்.
துண்டுப்பிரசுரம் வழங்கும் நடவடிக்கை
அதன்படி இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு கோரி பருத்தித்துறை நகரில் வர்த்தகர்கள் மற்றும் பொது மக்களுக்கு துண்டுப்பிரசுரம் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

துண்டுப்பிரசுரம் வழங்கும் நடவடிக்கையில் பருத்தித்துறை நகரசபை உறுப்பினர்கள் இணைந்திருந்தனர்.
யுத்தம் நிறைவடைந்து 16 ஆண்டுகள் கழிந்தும் இதுவரை பருத்தித்துறை பிரதான தபாலகம், மற்றும் பருத்தித்துறை நீதிமன்றம் ஆகியவற்றிற்கான காணிகள் விடுவிக்கப்படாமையினாலேயே குறித்த மக்கள் போராட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 24