வெளிநாட்டு கடன்களை செலுத்த திட்டம் இல்லாதவர்கள் நாட்டை பொறுப்பேற்க கூடாது: பந்துல பகிரங்கம்
வெளிநாட்டு கடன்களை மீள செலுத்த திட்டம் இல்லாதவர்கள் நாட்டின் அதிகாரத்தை பொறுப்பேற்க நினைக்க கூடாது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 2048 ஆம் ஆண்டு வரையில் இலங்கை பெருந்தொகை கடனை செலுத்த வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இந்த காலப்பகுதியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள முயற்சிப்பவர்கள் கடனை செலுத்த வேண்டிய கடப்பாடு உடையவர்கள் எனவும் அதற்கான திட்டத்தை அவர்கள் கொண்டிருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மீண்டும் பொருளாதார நெருக்கடி
மேலும், கடன் செலுத்துகை தொடர்பில் முன்கூட்டியே திட்டங்கள் எதுவும் இன்றி நாட்டுக்குள் ஆட்சிப் பொறுப்பினை ஏற்க முயற்சிப்பவர்களினால் நாட்டு மக்கள் மேலும் மேலும் நெருக்கடிகளை எதிர்நோக்குவார்கள் எனவும் கடந்த காலங்களிலும் இதே அனுபவம் மக்களுக்கு ஏற்பட்டது எனவும் தங்களது ஆட்சிக் காலத்தை தாண்டியும் கடனை மீள செலுத்துவதற்கான திடமான திட்டங்களைக் கொண்டவர்களே ஆட்சி பொறுப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மக்களை ஏமாற்றிய ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்டால் மீண்டும் நாடு பெரும் நெருக்கடி நிலைகளை சந்திக்கும் எனவும் எரிசக்தி, எரிபொருள், எரிவாயு, உரம் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு மீண்டும் நெருக்கடி நிலை ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
