கரிநாளாக பிரகடனப்படுத்தி சர்வதேசத்திடம் நீதி கோர அனைவரும் அணிதிரழ்வோம்

SRILANKA
By Independent Writer Jan 31, 2021 07:27 PM GMT
Report

மத குருக்கள், பொது அமைப்புக்கள், சிவில் சமூகங்கள், வர்த்தக சங்கங்கள் தமிழ்த்தேசிய கட்சிகள், பல்கலைக்கழக மாணவ சமூகங்கள் இணைந்து பூரண கதவடைப்புக்கு ஆதரவு வழங்கி வடக்கு, கிழக்கு தழுவிய அறவழிப் போராட்டத்திற்கு அணி திரளுமாறு அன்பு உரிமையுடன் வேண்டி நிற்கின்றோம் என வடக்கு, கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் பணிப்பாளர் பத்மநாதன் கருணாவதி அழைப்பு விடுத்துள்ளார்.

இன்றைய தினம் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த செய்திக் குறிப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

கடந்த ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்னர் இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு பிராந்தியத்தில் தமக்கே உரித்தான தனித்துவமான மொழி, கலாச்சாரம், பொருளாதாரம் என்பற்றுடன் தம்மைத் தாமே தனியரசாக ஆண்ட தமிழினம் 1505ஆம் ஆண்டில் இத்தீவில் காலடி வைத்த போர்த்துக்கேயர்களிடமும், அவர்களைத் தொடர்ந்து வந்த ஒல்லாந்தர்களிடமும் தனது ஆட்சியதிகாரத்தின் ஒரு பகுதியை இழந்ததுடன் 1796 இல் இலங்கைத் தீவில் காலடி வைத்த ஆங்கிலேயர்களிடம் கடைசித் தமிழ் மன்னன் பண்டாரவன்னியனின் வீழ்ச்சியோடு ஒட்டுமொத்த தமிழ் இராட்சியங்களும் வீழ்ச்சியடைந்தது.

அதே போன்று தீவின் தென்பகுதியை ஆண்ட சிங்கள மன்னர்களும் தோற்கடிக்கப்பட்டு தீவு முழுவதும் ஆங்கிலேயர்களின் ஆளுகையின் கீழ் கொண்டுவரப்பட்டது.

1833ஆம் ஆண்டு வரை வடக்கு, கிழக்கைத் தனி நிர்வாகமாகவும், தென்பகுதியை வேறு நிர்வாகமாகவும் நிர்வகித்து வந்த ஆங்கிலேயர்கள் நிர்வாக வசதி கருதி இலங்கைத்தீவு முழுவதையும் 1833ஆம் ஆண்டு ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்தனர்.

தமது நிர்வாக வசதிக்காக நாடு முழுவதையும் ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்த ஆங்கிலேயர்கள் 1948ஆம் ஆண்டு இத் தீவை விட்டு வெளியேறும் போது வடக்கு, கிழக்கு தமிழர்களின் ஆட்சியதிகாரத்தினை தமிழர்களிடம் கையளிக்காமல் தீவு முழுவதைனையும் ஆளும் அதிகாரத்தைப் பெரும்பான்மை பௌத்த சிங்களவர்களிடம் ஒப்படைத்துச் சென்றுவிட்டனர்.

அதனால் 1948ஆம் ஆண்டு முதல் தமிழர்கள் தம்மைத் தாமே ஆளும் இறைமையை பெரும்பான்மையின சிங்களவர்களிடம் இழந்து அடிமைப்பட்டுக்கிடக்கின்றார்கள்.

தமிழர்களை அடக்கி அடிமைப்படுத்தியாளும் அதிகாரம் பிரித்தானியர்களது கைகளிலிருந்து பெரும்பான்மையினச் சிங்கள பேரினவாதிகளின் கைகளுக்கு உத்தியோகப்பூர்வமாக மாற்றப்பட்ட தினமே பெப்ரவரி 04 ஆகும்.

பிரித்தானியர்களுக்குப் பதிலாக அயல் இராட்சியத்தைச் சேர்ந்த சிங்கள பௌத்த பேரினவாதிகள் தமிழ் மக்களை அடக்கியாளும் காலணித்துவ ஆட்சி ஆரம்பமானது.

இதனாலேயே இலங்கையின் சுதந்திர தினத்தைக் கரி நாளாகத் தமிழ் தலைவர்கள் பிரகடனப்படுத்தியதுடன், கடந்த ஏழு தசாப்தங்களாக சுதந்திர தினத்தைத் தமிழ் மக்கள் புறக்கணித்து வந்துள்ளனர்.

அதனை ஓர் போராட்டமாகவே தமிழ் தலைவர்கள் முன்னெடுத்து வந்துள்ளனர். அந்தப் போராட்டத்தில் திருமலை நடராஜன் தனது இன்னுயிரைத் தியாகம் செய்தமையை நன்றியுடன் நினைவு கூருகின்றோம்.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் இருப்பை மதிக்காது தமிழர்களின் தாயகத்தை ஆக்கிரமித்து சிங்கள பௌத்த மயமாக்கல், மொழியையும் கலாச்சாரத்தையும் அழித்தல், வரலாற்றை திரிவுபடுத்தி அழித்தல், பொருளாதாரத்தைக் கொள்ளையடித்தல், கல்வியை அழித்தல் போன்ற செயற்பாடுகளே தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறான செயற்பாடுகள் மூலம் சிங்கள தேசத்தின் அடையாளங்களுக்குள் தமிழ்த்தேசத்தின் அடையாளங்களைக் கரைத்து தமிழ்த் தேசத்தின் இருப்பை அழித்து எமது தாயகத்தில் எமது மக்களைச் சிறுபான்மையினமாக மாற்றி சிங்கள பௌத்த பேரினவாதிகளிடம் கையேந்தி வாழும் நிலைக்குள் கொண்டுவரும் செயற்பாடுகளே கடந்த 72 வருடங்களாகத் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றது.

இச் செயற்பாடுகளை எதிர்த்து தமிழ் தலைவர்கள் ஜனநாயக வழியில் போராடினார்கள். தொடர்ந்து தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்திப் போராடினார்கள்.

அந்த ஆயுதப் போராட்டம் இனவழிப்பு யுத்த மூலம் அழிக்கப்பட்டுள்ளது. அப்போராட்டம் தமிழ்த் தேசத்தின் மீதான கட்டமைப்பு சார் இனவழிப்பை தடுத்துப் பாதுகாக்கும் கவசமாக விளங்கியது.

அந்த பாதுகாப்பு கவசம் நீக்கப்பட்ட பின்னர் தமிழ்த் தேசத்தின் இருப்பை சிங்கள பௌத்த பேரினவாதம் விரும்பிய வகையில் அழிக்கும் வேலையைத் தீவிரப்படுத்தியுள்ளது.

இவ்வாறான சூழ்நிலைகளானது சுதந்திரதினத்தை முன்னெப்பொழுதும் இல்லாதளவுக்கு கரி நாளாக அனுஷ்டிப்பது மட்டுமல்ல அன்றைய தினம் மக்கள் பல்லாயிரமாகத் திரண்டு எதிர்ப்பு போராட்டம் நடாத்த வேண்டிய தேவையை மேலும் அதிகரித்துள்ளது.

மேற்படி ஒடுக்கு முறைகளுக்கு எதிராக நீதி கேட்டுப் போராட வேண்டிய நிலையில் இந்த அழிப்புச் செயற்பாடுகளை நியாயப்படுத்தி எமது மக்களை விரும்பி ஏற்றுக்கொள்ள வைக்கும் முயற்சிகள் தமிழ் மக்கள் நம்பியவர்களால் முன்னெடுக்கப்படுவதென்பது மிகவும் ஆபத்தானது.

இந்நிலையில் மக்கள் தமது நிலங்களையும், மொழி கலாசாரத்தையும், பொருளாதாரத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்காகப் போராட வேண்டும்.

யுத்தத்தின் முடிவில் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்கள், இராணுவத்தினராலும், துணை இராணுவக் குழுக்களாலும் கைது செய்யப்பட்டும், கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்கவும், யுத்தத்தின்போது இனவழிப்புச் செய்து கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும், அரசியல் கைதிகள் விடுதலை உறுதிப்படுத்தப்படவும், தமிழ்த் தேசத்தின் அங்கீகாரம் கிடைத்திடவும் இலங்கையின் சுதந்திர தினத்தைக் கரி நாளாக அனுஷ்டிக்குமாறு அறைகூவல் விடுக்கின்றோம்.

04-02-2021வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சியில் காலை 8-30 மணிக்கு கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பமாகி பழைய பஸ்தரிப்பிடத்தை சென்றடையும்.

கிழக்கு மாகாணத்தில் சம நேரத்தில் மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் ஆரம்பமாகி காந்தி பூங்காவைச் சென்றடையும் எனவும் அவர் மீளவும் குறிப்பிட்டுள்ளார்.  

6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US