விரைவில் இலங்கையின் எதிர்கால தலைவரை பார்க்கலாம்! - உதய கம்மன்பில
நாடாளுமன்றத்தை கலைக்கும் வகையில் விரைவில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படும் என தூய ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றம் மற்றும் சிரேஷ்ட அரசாங்கப் பதவிகளை வகிப்பதைத் தடுக்கும் அரசியலமைப்பின் 22வது திருத்தம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
"எந்த ராஜபக்ச மன்னராக இருந்தாலும் இறுதியில் பசில் ராஜபக்சே நாட்டை ஆளுவார். இந்த நெருக்கடிக்கு தீர்வாக 22வது அரசியலமைப்பு திருத்தத்தை ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் முன்வைப்போம்."
"அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 70.1 எந்த நேரத்திலும் நாடாளுமன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும் என்று கூறுகிறது."
"நாடாளுமன்றத்தில் திடமான கோரம் 20 உள்ளது. 20 பேர் அமர்ந்து 11 பேர் விருப்பப்பட்டாலும் நாடாளுமன்றத்தை கலைக்க முடியும்." எனவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், விரைவில் நாட்டின் "எதிர்கால தலைவரைபார்க்கலாம். பொறுமையாக இருங்கள்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

253 பந்துகளில் 266 ரன் விளாசிய வீரர்! 228 ரன் குவித்த கேப்டன்..ஒரே இன்னிங்சில் இருவர் இரட்டைசதம் News Lankasri

அமெரிக்காவில் பிறந்தவர்களை நாடுகடத்துவதுதான் அடுத்த வேலை: அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சூசகம் News Lankasri
