யாழ். சிறைச்சாலையில் குவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு படையினர்
நாடு முழுவதும் உள்ள பல சிறைச்சாலைகளில் அமைதியின்மை நிலவுவதாக வந்த தகவல்களின் அடிப்படையில், யாழ்ப்பாணச் சிறையில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அதன்படி, யாழ். பாதுகாப்புப் படைகளின் தளபதி, மேஜர் ஜெனரல் கே.ஜே.என்.எம்.பி.கே. நவரத்ன, சிறைச்சாலையில் கள ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
தீவிர பாதுகாப்பு
மேலும், பாதுகாப்பு நோக்கங்களுக்காக இராணுவ வீரர்கள் குழுவும் அங்கு நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிடையில், யாழ்ப்பாண மாவட்டப் பொறுப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர், யாழ்ப்பாண மாவட்டத்தின் சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தின் பல பொலிஸ் நிலையங்களின் பொறுப்பாண்மை அதிகாரிகள் ஆகியோரும் சிறைக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும், சிறைக்குள் தற்போது ஒரு சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், சிறையிலிருந்து கன உலோகப் பொருட்கள் மற்றும் தளபாடங்களை அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.