இலங்கையை அதிர வைக்கும் குற்றச்செயல்களின் பின்னணி - அதிர்ச்சியில் அநுர அரசாங்கம்
நாட்டில் நடந்த துப்பாக்கிச் சூடு, கொலைகள் மற்றும் போதைப்பொருள் வலையமைப்பில் நேரடியாக தொடர்புடைய பல பாதுகாப்புப் படையினரின் பெயர்கள் மற்றும் விபரங்களை பொலிஸார் கண்டுபிடித்தள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஆபத்தான நபர்கள் தொடர்பில் பொலிஸார், புலனாய்வு அமைப்புகள் மற்றும் முப்படைகள் தனித்தனியாக உள்ளக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இராணுத்தில் இருந்து தப்பியோடிவர்கள் இந்த குற்றச்செயல்களில் ஈடுபடுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
குற்றச்செயல்கள்
கட்டளைக்கு ஏற்ப துப்பாக்கி சூடு நடத்துதல், பாதாள உலகத்திற்கு துப்பாக்கிகளை வழங்குதல், போதைப்பொருள் கடத்தல் ஆகிய குற்றச்செயல்களில் அவர்கள் ஈடுபடுவதாக குறித்த பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விசாரணைகள் முடிந்தவுடன் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என அவர் கூறியுள்ளார்.
துப்பாக்கி
விசேடமாக இலங்கை பொலிஸ் மற்றும் இராணுவத்திலிருந்து துப்பாக்கிகள் பல வெளியேற்றப்பட்டுள்ளதுடன் விடுதலைப் புலிகளிடமிருந்து அரசாங்கம் மீட்ட துப்பாக்கிகளும் பாதுகாப்பு பெட்டகங்களிலிருநு்து வெளியேறப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
சமீபத்தில் நடந்த பல குற்றங்களுக்கு தகவல்கள் வழங்கியமை தொடர்பிலும் பல பாதுகாப்புப் படையினர் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாக செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan
