வெளிநாட்டு பயணிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த பாதுகாப்பு ஏற்பாடு
இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை காரணமாக பொத்துவில் அறுகம்பே பிரதேசத்தை நோக்கி பெருமளவான சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.
இங்கு வருகை தரும் உள்ளுர் வெளிநாட்டு பயணிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காகவும், கடலலை விளையாட்டில் ஈடுபடுபவர்களையும் பாதுகாப்பதற்கென பாதுகாப்பு நடவடிக்கையில் பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

செம்மணி அவலத்தை விடுதலைப் புலிகள் மீது திசைதிருப்ப தமிழர் தாயகத்தில் நடக்கும் சதி! அநுர அரசுக்கும் சிக்கல்
வீதி சோதனை
குறிப்பாக அம்பாறை மாவட்டம் பொத்துவில் அறுகம்பை பகுதி சுற்றுலா இடங்களை நோக்கி செல்லும் போது ஊறணி பகுதியில் இருந்து பொத்துவில் நகரப்பகுதி வரை இராணுவம் பொலிஸார் கடற்படையினரின் தற்காலிக வீதி தடையுடன் கூடிய வீதி சோதனை சாவடி அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளது.
இதன் காரணமாக கடும் பாதுகாப்பு கெடுபிடிக்கு மத்தியில் பொதுமக்கள் தமது அன்றாட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் முக்கிய சந்திகள் இதர வர்த்தக நிலையங்களில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் புலனாய்வாளர்கள் என மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மோப்பநாய்களின் உதவியுடன் சோதனை
இது தவிர சந்தேகத்திற்கிடமான வாகனங்களை மோப்பநாய்களின் உதவியுடன் சோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.




