கிளப் வசந்த கொலைச் சம்பவத்தின் சூத்திரதாரிக்குப் பிணை
கிளப் வசந்த என்றழைக்கப்பட்ட வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேராவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஹோமாகம மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று(29) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
கிளப் வசந்த கடந்த வருடம் அத்துருகிரிய பச்சை குத்தும் நிலையமொன்றினுள் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார்.
பிணை
இதனையடுத்து குறித்த பச்சை குத்தும் நிலையத்தின் உரிமையாளர் துலான் சஞ்சுல அல்லது டெட்டு மல்லீ கொலைச்சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக குற்றம் சாட்டப்பட்டு கடந்த ஒருவருட காலமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அதன் பிரகாரம் ஒரு இலட்சம் ரொக்கப் பிணை மற்றும் இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் அவருக்கு வெளிநாட்டுப்பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



