இந்தோனேஷியாவில் சிறப்பு நடவடிக்கையில் சிக்கிய பெண் - இலங்கைக்கு நாடு கடத்தல்
குற்ற கும்பல் உறுப்பினர் கெஹெல்பத்தர பத்மே மற்றும் குழுவினருடன் கைது செய்யப்பட்ட பெண் மற்றும் குழந்தை, இன்று மதியம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிலிருந்து UL-365 விமானத்தில் இன்று மாலை சுமார் 5.50 மணியளவில் அவர்கள் நாட்டிற்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கெஹல்பத்தர பத்மே மற்றும் கும்பலின் ஏனைய உறுப்பினர்கள் குழு சமீபத்தில் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்டனர்.
பெண்ணும் குழந்தையும் கைது
மேலும் அந்த கும்பலுடன் பெண்ணும் குழந்தையும் கைது செய்யப்பட்டனர். எனினும் அந்தப் பெண் மீது கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், இந்தோனேசிய அதிகாரிகள் அந்தப் பெண்ணை நாட்டிற்கு அனுப்பிவிட்டதாக கூறப்படுகிறது.





வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan

புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam
