தொற்றாளர்கள் அதிகளவு அடையாளம் காணப்படும் இடங்கள் மட்டும் முடக்கப்படும்! ஜெனரல் கமால் குணரட்ண
கோவிட் வைரஸ் தொற்றின் தீவிரத்தால் நாட்டை முழுமையாக முடக்குவதற்கு எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார்.
ஆனால், கோவிட் தொற்றாளர்கள் அதிகளவில் அடையாளம் காணப்படும் பிரதேசங்கள் முடக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாதுகாப்பு அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,
கோவிட் வைரஸ் தொற்று நிலைமையில் நாட்டை முழுமையாக முடக்கினால் பொருளாதார ரீதியில் நாடு வீழ்ந்து விடும்.இதனால் நாட்டை முடக்காது கோவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்கவே அரசு முயற்சிக்கும்.
இதேவேளை, வைத்தியசாலைகளில் ஏற்படக்கூடிய இடப்பற்றாக்குறையைக் கருத்திற்கொண்டு
இராணுவத்தால் 1500 கட்டில்களைக் கொண்ட சிகிச்சை நிலையங்களை அமைப்பதற்கான
நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri