மற்றுமொரு இராணுவ ஜெனரலுக்கு முக்கிய பதவி!
அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் தொடர்பான கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கையளித்ததாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக விமலவீர திஸாநாயக்க அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டார். அதற்கு முன்னர் அவர் வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சராக கடமையாற்றினார்.
விமலவீர திஸாநாயக்க இராஜாங்க அமைச்சராக இருந்த போது ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ வனஜீவராசிகள் அமைச்சின் செயலாளராக இருந்தார்.
முன்னதாக அரசாங்கத்தின் முக்கிய பதவிகளுக்கு ஓய்வுபெற்ற இராணு அதிகாரிகள் பலர் நிமிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.