ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளராக நாகலிங்கம் ரட்ணலிங்கம் தெரிவு
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளராக செயற்பட்ட ந. நல்லநாதர் மறைவின் பின்னர் வெற்றிடமாக காணப்பட்ட பதவிக்கு நா.ரட்ணலிங்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் கூட்டம் இன்று (07.04.2024) காலை வவுனியா(Vavuniya) கோயில் புளியங்குளத்தில் உள்ள தனியார் விடுதியொன்றில் நடைபெற்றுள்ளது.
செயலாளர் பதவி
இதன்போது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளர் பதவி எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு புளொட் அமைப்பிற்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இதன் பிரகாரம் மூத்த தலைவர் நல்லநாதர் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் அண்மையில் மரணமடைந்த நிலையில் அவரின் இடத்திற்காக புளொட் அமைப்பை சேர்ந்த நாகலிங்கம் ரட்ணலிங்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam
தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam