வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் ஆசிரியர்கள்
கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க அரசாங்கம் தவறுமானால் டிசம்பர் மாதத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போது, அதன் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனை தெரிவித்துள்ளார்.
கைவிடப்படும் நிலைமை
அது தொடர்பில் தொடர்ந்து பேசிய அவர், கல்வி சீர்திருத்த வேலைத்திட்டங்கள் கைவிடப்படும் ஓர் நிலைமை காணப்படுவதாக ஆசிரியர்கள் மத்தியில் கலந்துரையாடல் ஒன்று ஏற்பட்டுள்ளது.பாடசாலை நடைபெறும் காலம் 2 மணிவரை நீடிக்கப்பட்டமைக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 07 ஆம் திகதிக்குள் நாங்கள் சமர்ப்பித்துள்ள சீர்திருத்த திட்டங்களில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும்.

அரசாங்கம் எமது பிரச்சினைகளுக்கு கரிசனை கொள்ள தவறுமாயின் டிசம்பர் மாதம் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு செல்வதை தடுக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் புதிய கல்வி சீர்திருத்தங்கள் 2026 முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
இது தொடர்பில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் மத்தியில் தொடர்ந்து பாரிய எதிர்ப்புகள் தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |