தங்க விநியோக மோசடி: வெளியான தகவலை மறுக்கும் ஹிஸ்புல்லாஹ்
தங்க விநியோகம் தொடர்பான மோசடியில் தாம் 2 மில்லியன் டொலர்களால் ஏமாற்றப்பட்டதாக வெளியான செய்தியை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் மறுத்துள்ளார்.
கானா நாட்டின் ஊடகங்களில் வெளிவந்த அந்த செய்தி இலங்கையின் ஊடகங்களிலும் நேற்று இரவு பிரசுரிக்கப்பட்டிருந்தது.
ஹிஸ்புல்லாஹ்
இந்தநிலையில், குறித்த செய்தியை ஹிஸ்புல்லாஹ்வின் ஊடகப் பிரிவு முற்றிலும் மறுத்துள்ளது.

அந்தச் செய்தியில் எவ்விதமான உண்மைத்தன்மையும் இல்லை என்று அவரின் என்றும் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வியாபார நோக்கத்திற்காக சவூதி அரேபியாவைச் சேர்ந்த நண்பர்களுடன் கானா நாட்டிற்குச் சென்றிருந்தார்.
மோசடி விவகாரம்
என்றும்,அங்கே சிலர் மோசடி செய்ய முயன்றதை அறிந்த அவர், உடனடியாக இது குறித்து அந்த நாட்டின் பொலிஸில் முறைப்பாடு செய்தார் என்றும் அவரின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்தே ஏமாற்ற முயன்றதாக கூறப்படும் 11 பேரையும் கானா நாட்டின் பொலிஸார் கைது செய்தனர் என்றும் ஹிஸ்புல்லாஹ்வின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் தவிர, ஹிஸ்புல்லாவுக்கும் இந்த மோசடி விவகாரத்திற்கும் வேறு எந்த தொடர்பும் இல்லை என்றும் அவரின் ஊடகப் பிரிவு வலியுறுத்தியுள்ளது.
தீவு நாடொன்றை மொத்தமாக தாக்கவிருக்கும் புயல்: ஹொட்டல் ஒன்றில் சிக்கிய 200 பிரித்தானியர்கள் News Lankasri
7ம் அறிவு படத்தின் வில்லன் டாங்லியை நியாபகம் இருக்கா? முகம் எல்லாம் ஒட்டிப்போய் அடையாளமே தெரியலையே... Cineulagam