ரிஷி சுனக்கை வெளியேற்ற இரகசியத் திட்டம்
பிரித்தானியாவில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் பலம்பொருந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று பிரதமர் ரிஷி சுனக்கை வெளியேற்ற இரகசிய பேச்சுவார்த்தை ஒன்றை முன்னெடுத்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
அத்துடன் Penny Mordaunt என்பவரை நாட்டின் பிரதமராக பொறுப்பளிக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும், பல ஆண்டுகளில் பிரித்தானியர்கள் நான்காவது கன்சர்வேடிவ் கட்சி பிரதமரைப் பெற இருப்பதாகவும் கூறப்படுகின்றுது.
கட்சி தலைவர் தேர்தல்
இந்நிலையில் மிக விரைவிலேயே கன்சர்வேடிவ் கட்சி தலைவருக்கான தேர்தலையும் முன்னெடுக்கும் திட்டத்தை இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு வகுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த கட்சி தலைவர் மற்றும் பிரதமரை மிக விரைவில் அறிவிக்கவும் அவர்கள் தயாராகி வருவதாகதெரிவிக்கப்படுகின்றது.
மேலும், மே மாதம் நடக்கும் உள்ளாட்சி தேர்தலை பொறுத்தே ரிஷி சுனக்கை நீக்குவது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும், தற்போதைய அரசியல் நெருக்கடியில், ரிஷி சுனக் மிகவும் பலவீனமாக காணப்படுவதாக கூறப்படுகிறது.
மொத்த கன்சர்வேடிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மிக விரைவில் தலைவரை தெரிவு செய்யும் கூட்டத்தை முன்னெடுக்க உள்ளனர்.
53 கன்சர்வேடிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்ககள் ரிஷி சுனக்குக்கு எதிராக நம்பிக்கை இல்லா கடிதம் அளித்தால், பிரதமர் பொறுப்பில் இருந்து கட்டாயம் ரிஷி சுனக் விலக நேரும் என்றும் கூறுப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |