மைத்திரி தலைமையில் இரவில் இரகசிய சந்திப்பை நடத்திய சுதந்திரக் கட்சியினர்!
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் இரகசிய கூட்டமொன்றை நடாத்தியுள்னர். நேற்றைய தினம் இரவு இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் ஒருவரது கொழும்பில் அமைந்துள்ள வீடொன்றில் இந்த கூட்டம் நடாத்தப்பட்டுள்ளது.
கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர உள்ளிட்டவர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறான விடயங்கள் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.
அரசாங்கத்தின் செயற்பாடுகளை கூட்டணி கட்சியான சுதந்திரக் கட்சி பகிரங்கமாக விமர்சனம் செய்து வரும் பின்னணியில் இந்த இரகசிய கூட்டம் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
