ஆபத்திலுள்ள ஹரிணியின் பதவி! மகிந்த வெளியிட்டுள்ள தகவல்
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பதவி விலக வேண்டும் எனத் தாம் கூறமாட்டேன் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று(7) ஊடகங்களிடம் தெரிவித்தார்.
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் பதவி விலகல் குறித்து அழைப்பு விடுப்பது தமது நிலைப்பாடு அல்ல எனவும் அவர் கூறினார்.
பிரதமர் பதவி
அரசின் செயற்பாடுகள் மற்றும் நாட்டின் நிலை குறித்து பொறுப்புடன் அணுக வேண்டும் எனவும், ஜனநாயக முறையில் தீர்வுகள் தேடப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
தரம் 6 மாணவர்களுக்குரிய ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் வயது வந்தோருக்கான இணையத்தளம் ஒன்றின் முகவரி அச்சிடப்பட்டிருந்த விவகாரம் இலங்கை அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கல்வி அமைச்சுப் பதவியை வகிக்கும் பிரதமர் பதவி விலக வேண்டும் எனப் பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையையும் கொண்டுவரும் நடவடிக்கையில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி களமிறங்கியுள்ளது.
இது தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷவிடம் ஊடகங்களால இன்று வினவப்பட்டது.இதற்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.