6ஆம் வகுப்பு பாடப்புத்தக விவகாரம்: கல்வி அமைச்சரை கடுமையாக சாடிய இம்ரான் எம்.பி
6ஆம் தர பாடப்புத்தகத்தில் உள்ளடக்கப்பட்ட ஓரினச் சேர்க்கை தொடர்பான விவகாரம் தற்செயலானது அல்ல. அது திட்டமிடப்பட்டு சேர்க்கப்பட்டது என திருகோணமலை மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பில் இன்று(07.01.2026) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தற்செயலானது அல்ல..
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒரு பாடப்புத்தகம் பலரது தொடர்புகளைத் தாண்டி தான் வெளிவருகின்றது.
எழுத்தாளர் குழு, தட்டச்சு செய்வோர், பக்க வடிவமைப்பாளர்கள், புரூவ் பார்வையாளர், இணைப்பளார்கள், பணிப்பாளர், மேற்பார்வையாளர் எனப் பலரது தொடர்புகளைத் தாண்டித் தான் ஒரு பாடப் புத்தகம் வெளிவருகின்றது.

இந்த விடயங்களை புத்தகத்தின் ஆரம்ப பக்கங்களில் நாம் காணலாம்.
இந்நிலையில், ஒரு புத்தகத்தில் எந்தவொரு விடயத்தையும் யாரும் தனிப்பட்ட ரீதியில் இடையில் செருக முடியாது என்பது தெளிவாகின்றது.
இந்த வகையில் நோக்கும் போது 6 ஆம் தரப் பாடப் புத்தகத்தில் உள்ளடக்கப்பட்ட ஓரினச் சேர்க்கை தொடர்பான விவகாரம் தற்செயலானது அல்ல. அது திட்டமிட்ட அடிப்படையில் சேர்க்கப்பட்டதே என்பது தெளிவாகின்றது.
கலாசாரம் சீர்குலைவதற்கான முதல்படி
நமது நாட்டுக்கென்று சிறந்த கலாசார பாரம்பரியங்கள் இருக்கின்றன. இந்தக் கலாசாரங்களை சிதைப்பதற்கு இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது என்பதற்கு இது சிறந்த உதாரணமாகும்.
பொதுமக்களின் எதிர்ப்பை சமாளிப்பதற்காக விசாரணை நடத்தப்படுகின்றது எனக் கூறி காலங்கடத்தும் செயற்பாடு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்றது. எனினும், இந்த விடயத்தில் யாரும் தவறு செய்தவராக அடையாளப்படுத்த பட மாட்டார் என்பது யதார்த்தமாகும்.

காலம் இதற்கு பதில் சொல்லும். ஏனெனில் திட்டமிட்ட அடிப்படையில் பொதுவாக எடுக்கப்பட்ட ஒரு தீர்மானத்திற்கு யாரை குற்றம் சாட்ட முடியும் கேட்க விரும்புகின்றேன்.
கல்வி அமைச்சருக்கு இது போன்ற குழுக்களோடு தொடர்பு உள்ளது என்ற விமர்சனம் கடந்த காலங்களில் வெளிவந்ததை பொதுமக்கள் மறந்திருக்க மாட்டார்கள் என நம்புகின்றேன்.
எனவே, அவர் தமது அதிகாரங்களைப் பயன்படுத்தி தனக்கு பிடித்த கொள்கையை பாடப்புத்தகத்தில் உள்வாங்கியுள்ளார் என்பதில் என்ன சந்தேகமுள்ளது.
இவர் தொடர்ந்து கல்வி அமைச்சராக இருந்தால் நமது கலாசார, பாரம்பரியங்களை சிதைத்து விடுவார். இதனால் தான் நாம் கல்வி அமைச்சருக்கெதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானமொன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri