ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுவில் ஏற்பட்ட மாற்றம்
ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினராக பேராசிரியர் சரித்த ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டவர்.
கண்டி கட்டுகம்பளை தொகுதி அமைப்பாளராக பல தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சக்தியின் வெற்றிக்காக பாடுபட்டவர்.மேலும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு பூரண ஆதரவளித்தவர்.
தகுதிகள்
பேராசிரியர் சரித ஹேரத்தின் அர்ப்பணிப்பைப் பாராட்டி, கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தத்துவப் பேராசிரியர் மற்றும் பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவின் (COPE) முன்னாள் தலைவர் ஆவார்.

தத்துவத்தில் சிறப்புப் பட்டம் பெற்ற இவர், லத்தீன் விட்ஜென்ஸ்டைனின் தத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் நெறிமுறைகள் குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டவராவார்.