ரணிலை ஜனாதிபதியாகத் தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்குச் சீட்டுகள் அழிப்பு
கடந்த வருடம் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்வதற்கு நாடாளுமன்றத்தில் பயன்படுத்தப்பட்ட இரகசிய வாக்குச் சீட்டுகள் அழிக்கப்பட்டுள்ளதாகச் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (04.04.2023) நாடாளுமன்றத்தில் வைத்தே இதனை சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
20.07.2022 அன்று ஜனாதிபதி பதவிக்கான நாடாளுமன்ற உறுப்பினரைத் தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பில் பயன்படுத்தப்பட்ட வாக்குச் சீட்டுகளே அழிக்கப்பட்டுள்ளதாகச் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன கூறியுள்ளார்.
ஜனாதிபதியாகத் தெரிவு
சட்டத்தின் 18ஆவது பிரிவின் விதிகளின்படி, கடந்த மார்ச் 23ஆம் திகதியன்று நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் குழுவின் ஒப்புதலுடன், நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளரால் வாக்குச் சீட்டுகள் அழிக்கப்பட்டதாகச் சபாநாயகர் அறிவித்துள்ளார்.
விக்ரமசிங்க கடந்த ஆண்டு 134 வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்தால் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
வாக்குகள்
இதன்போது அவரை எதிர்த்துப் போட்டியிட்ட உறுப்பினர் டலஸ் அழகப்பெரும 82
வாக்குகளைப் பெற்றுள்ளார்.
மற்றும் ஒரு வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க 03 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
மொத்தமுள்ள 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 223 பேர் வாக்களித்தனர், அதில் 4
பேரின் வாக்குகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 1 மணி நேரம் முன்

புதிய சீரியலில் நாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ள பிக்பாஸ் புகழ் வினுஷா... எந்த டிவி தொடர் தெரியுமா? Cineulagam

ரஷ்யாவில் கொல்லப்பட்ட வட கொரிய வீரர்கள் குடும்பங்களுக்கு... கிம் ஜோங் உன் அளித்த உறுதி News Lankasri

ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய் வாங்கி... உக்ரைனுக்கு டீசலாக ஏற்றுமதி செய்யும் இந்தியா News Lankasri
