இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி
இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி திட்டமிட்டபடி கான்பூர் மைதானத்தில் நடக்கும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.
இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டிக்கு அச்சுறுத்தல்கள் இருந்தாலும், சூழல் தொடர்பில் அதிகாரிகளுடன் இணைந்து கண்காணித்து வருவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3, 20க்கு 20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக பங்களாதேஷ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளது.
இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி
இதில் முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செப்டம்பர் 19ஆம் திகதியன்று ஆரம்பமாகவுள்ளது.
இதன் பின்னர், இரண்டாவது டெஸ்ட் போட்டி உத்தரப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள கான்பூர் மைதானத்தில் செப்டம்பர் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்தநிலையில்,பங்களாதேஷில் உள்நாட்டு அரசியல் பிரச்சனைக் காரணமாக, பல்வேறு இடங்களில் கலவரம் நடந்து வருகின்றன.
அத்துடன், இந்துக்கள் மீதும், கோயில்கள் மீதும் தாக்குதல் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் காரணமாக, கான்பூர் மைதானத்தில் நடக்கவுள்ள இந்தியா – பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டிக்கு இந்து மகா சபா அமைப்புகளால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு, அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து, பாதுகாப்பு காரணமாக கான்பூர் மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டி வேறு ஒரு மைதானத்துக்கு மாற்றப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், உரிய பாதுகாப்புகளுக்கு மத்தியில், கான்பூரிலேயே இந்தப்போட்டி இடம்பெறும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை உறுதியளித்துள்ளது.





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

இந்தியா-பிரான்ஸ் புதிய ஒப்பந்தம்: உள்நாட்டில் 5-ஆம் தலைமுறை போர் விமான எஞ்சின்கள் தயாரிப்பு News Lankasri

இந்த 3 சூழ்நிலைகள்... இந்தியாவிற்கு எதிராக மீண்டும் அணு ஆயுத மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் News Lankasri

3000 கி.மீ தூர இலக்கை தாக்கும் புதிய ஏவுகணை: உக்ரைன் கையில் கிடைத்த பயங்கர ஆயுதம்! நடுக்கத்தில் ரஷ்யா News Lankasri
