இலங்கை அணியின் களப்பயிற்றுவிப்பாளர் நிலையில் இருந்து ரூக்ஸ் விலகல்
தற்போது இலங்கை கிரிக்கெட் அணியின் களப்பயிற்சியாளராக (Fielding) பணியாற்றி வரும் அன்டன் ரூக்ஸ், பதவியில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்காக முதல்தர கிரிக்கெட்டில் விளையாடிய மற்றும் நெதர்லாந்துக்கு பயிற்சியாளராக இருந்த ரூக்ஸ், மார்ச் 2022 இல் இலங்கையின் தேசிய களப் பயிற்சியாளராக பணியாற்றினார்.
இந்தநிலையில், 2024 ஒகஸ்ட் 14ஆம் திகதியன்று, இலங்கை கிரிக்கெட்டின் தேசிய களப்பயிற்சியாளர் பதவியில் இருந்து விலக முடிவு செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிய இருபதுக்கு20 கிண்ணம்
இந்தநிலையில், இந்த வாரம் இலங்கை அணியுடனான தமது கடைசி வாரமாக இருக்கும் என்று ரூக்ஸ் தெரிவித்துள்ளார்.
களப் பயிற்றுவிப்பாளராக தனது பதவிக்காலத்தில் இலங்கை அணி, இரண்டு ஆசியக் கிண்ண இறுதிப் போட்டிகளுக்கு முன்னேறியது.
இறுதியில் 2022 ஆசிய இருபதுக்கு20 கிண்ணத்தை வென்றது என்றும் ரூக்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியுடன் குறுகிய காலத்தை செலவிடும் வாய்ப்பு தமக்கு கிடைத்ததாக ரூக்ஸ் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |