10 வருடங்களின் பின்னர் இங்கிலாந்து மண்ணில் இலங்கை அணி வெற்றி
லண்டன் ஓவலில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பதும் நிஸ்ஸங்கவின் ஆட்டமிழக்காத சதத்தின் உதவியுடன், இலங்கை அணி, இங்கிலாந்து மண்ணில் நான்காவது டெஸ்ட் வெற்றியை பெற்றுள்ளது.
இது, இங்கிலாந்து மண்ணில், இலங்கை அணி 10 வருடங்களின் பின்னர் பெற்ற முதல் வெற்றியாகும்.
இறுதியாக இலங்கை அணி, இங்கிலாந்து மண்ணில் 2014 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டி ஒன்றில் வெற்றி பெற்றது.
8 விக்கட்டுக்களால் வெற்றி
மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி 325 மற்றும் 156 ஓட்டங்களை, முதல் மற்றும் இரண்டாம் இன்னிங்ஸ்களில் பெற்றது.
இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 263 ஓட்டங்களையும் இரண்டாம் இன்னிங்ஸில் 219 ஓட்டங்களை 2 விக்கட் இழப்புக்கும் பெற்றது.
இதன்படி, இலங்கை அணி இந்த போட்டியில் 8 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது.
எனினும், 2024 ஆம் ஆண்டின், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி, 2-1 என்ற கணக்கில் வென்றது.

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan
