நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட நிதி விரைவில்: அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா

International Monetary Fund Nimal Siripala De Silva Ranil Wickremesinghe Sri Lanka
By Rakesh Nov 18, 2023 09:55 AM GMT
Report

சர்வதேச நாணய நிதியத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்ட நீடிக்கப்பட்ட கடன் உதவியின் கீழ் இரண்டாவது தவணை டிசம்பர் மாதத்துக்குள் விடுவிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (17) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

குறையும் கோழி இறைச்சியின் விலை

குறையும் கோழி இறைச்சியின் விலை

2024 வரவு - செலவுத் திட்டம்

இங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

"குறுகிய கால இலாப நோக்கம் இன்றி, வீழ்ச்சியடைந்துள்ள தேசிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான நீண்ட கால வேலைத்திட்டத்தின் மேலும் ஒரு ஆரம்பத்தையே இம்முறை முன்வைக்கப்பட்டுள்ள வரவு - செலவுத் திட்டம் எடுத்துக்காட்டுகின்றது.

இந்த வரவு - செலவுத்திட்டத்தில் அதற்கு அவசியமான திட்டங்கள் உட்பட கொள்கைகள் மிகவும் தெளிவாக முன்வைக்கப்பட்டுள்ளன. ஒரு சிலர் இதனை தேர்தலுக்காக முன்வைக்கப்பட்ட வரவு - செலவுத் திட்டம் என்கின்றனர். 

நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட நிதி விரைவில்: அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா | Second Imf Loan Soon Nimal Siripala De Silva

அவ்வாறு தேர்தலுக்காக முன்வைக்கப்பட்ட ஒன்றாக இருந்தால், அபிவிருத்தி தொடர்பான அனைத்தையும் மறந்து பொருளாதார ரீதியில் மேற்கொள்ள வேண்டிய பாரிய தீர்மானங்களை எடுக்காமல், பொது மக்களுக்கு பணத்தை அச்சடித்தேனும் நிவாரணங்களை வழங்கியிருக்கும்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி உட்பட மக்கள் போராட்டங்கள் போன்றவற்றால் நாட்டில் அரசியல் மற்றும் சமூக ஸ்தீரத் தன்மை இல்லாமல்போனது. அவ்வாறு அரசியல் மற்றும் சமூக ஸ்தீரத் தன்மை இல்லாமல்போன ஒரு நாட்டுக்கு நிதி உதவிகளோ, கடன் வசதிகளோ மற்றும் முதலீடுகளோ கிடைப்பதில்லை.

இவற்றை சரியாக முகாமைத்துவம் செய்ய அன்று இருந்த ஆட்சியாளர்களால் முடியவில்லை. அதனால் அவர்கள் பதவி விலகினர். அப்போது, அதனை முகாமைத்துவம் செய்யும் பொறுப்பை எதிர்க்கட்சிக்கு வழங்க நாங்கள் முன்வந்தோம். ஆனால், அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்தக் கொள்கையுடன் நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்தில் முன்னோக்கிச் செல்லும்போது மேலே குறிப்பிட்டவாறு பாரிய அளவில் மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவது குறித்து எதிர்பார்க்க முடியாது.

நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட நிதி விரைவில்: அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா | Second Imf Loan Soon Nimal Siripala De Silva

ஆனால், அவர் நிவாரணங்களையும் வழங்கியுள்ளார். தேசிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தையும் செயற்படுத்தினார். அதேபோன்று நாட்டின் அபிவிருத்திக்கு தடையாக இருந்த பல்வேறு விடயங்களை அகற்றி அபிவிருத்தியை நோக்கி நாட்டைக் கொண்டு செல்வதற்கு அவசியமான பின்புலத்தையும் இந்த வரவு செலவுத்திட்டத்தில் முன்வைத்துள்ளார்.

2024 வரவு - செலவுத் திட்டத்தில் எந்தவொரு நன்மையும் கிடைக்கவில்லை என்று சிலர் கூறுகின்றனர். அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு, முதியோர் மற்றும் அங்கவீனர் கொடுப்பனவு உயர்வு உட்பட கல்வி, சுகாதாரம், பிரதேச அபிவிருத்தி மற்றும் காணி உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு நிவாரணங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

அந்தச் சந்தர்ப்பத்திலே தான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த கடினமான பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.அவரின் கொள்கையை அவர் தெளிவாக முன்வைத்தார். குறுகிய கால, பிரபல்யமான வேலைத்திட்டங்கள் அன்றி, நீண்டகால அடிப்படையில் நாட்டைக் கட்டியெழுப்பும் திட்டங்களையே தான் செயற்படுத்தவதாக அவர் எடுத்துக்காட்டினார்.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு


இவை அனைத்தையும் வழங்க அரசுக்கு வருமானம் தேவை. நாம் செலவிடும் தொகைக்கு ஏற்ப வருமானத்தை நாம் ஈட்டிக்கொள்ள வேண்டும். அதுதான் வரவு - செலவுத் திட்டமாகும். அரசு பெரும்பாலும் வரி வருமானத்தில் இருந்துதான் இவ்வாறான நிவாரணக் கொடுப்பனவுகளை மேற்கொள்கின்றன.

நாம் குறித்த நேரத்தில் சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்லாமையே இந்த அனைத்து பொருளாதார நெருக்கடிகளுக்கும் காரணம் என்று எதிர்தரப்பினர் கூறினர். அவ்வாறு செல்லும்போது முக்கியமாக அவர்கள் இடும் நிபந்தனைகளை நாம் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டியேற்படும்.

மாவீரர் நினைவேந்தலுக்கு தடை விதிக்க கோரிக்கை: பருத்தித்துறை நீதிமன்றம் தள்ளுபடி

மாவீரர் நினைவேந்தலுக்கு தடை விதிக்க கோரிக்கை: பருத்தித்துறை நீதிமன்றம் தள்ளுபடி


நாடாளுமன்றத்தில் சர்வதேச நாணய நிதியத்துக்குச் செல்லுங்கள் என்றும் அவர்கள் கூறுகின்றனர். அதேபோன்று கடந்த அரசு பாரிய அளவில் வரி விலக்குகளை வழங்கியமையே பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் என்றும் எதிர்த் தரப்பினர் கூறுகின்றனர். அப்படியென்றால் வரிகளை அதிகரிக்க வேண்டும் என்பதை அவர்களே ஏற்றுக்கொள்கின்றனர்.

அவ்வாறு வரி அதிகரிக்கப்படும் போதும் அதற்கு எதிராகக் கோஷங்களை எழுப்புகின்றனர். இவ்வாறு அவர்கள் இருவேறு முரண்பட்ட கருத்துக்களை முன்வைக்கின்றனர்.சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணையும் மிக விரைவில் எமக்கு கிடைக்கவுள்ளது.

சர்வதேச நாணய நிதியம்

எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் அது எமக்கு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கின்றேன். சர்வதேச நாணய நிதியத்தின் மூலம் எமக்கு கிடைக்கும் தொகையை விட அதன் ஊடாக ஏனைய கடன் வழங்குனர்களுக்கு எம்மீது எற்படும் நம்பிக்கையே எமக்கு மிக முக்கியம்.

நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட நிதி விரைவில்: அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா | Second Imf Loan Soon Nimal Siripala De Silva

அந்த நம்பிக்கையின் மூலம் ஏனைய சர்வதேச நிதி நிறுவனங்கள் எமது நாட்டுக்கு மீண்டும் அபிவிருத்திப் பணிகளுக்காக கடன் வழங்க முன்வருவதுடன் முதலீட்டாளர்கள் இலங்கையில் தமது முதலீடுகளைச் செய்யவும் முன்வருவார்கள். எமது கடன் மறுசீரமைப்புக்குப் பிறகு நாட்டில் தடைப்பட்டுள்ள அனைத்து அபிவிருத்திப் பணிகளையும் முன்னெடுக்க முடியும்.

நட்டத்தில் இயங்கிவந்த பல்வேறு அரச நிறுவனங்கள் இலாபமீட்டும் நிலைக்கு வந்துள்ளமை, தற்போது நாம் முன்னெடுக்கும் பொருளாதார வேலத்திட்டங்கள் வெற்றியடைந்து வருவதை எடுத்துக்காட்டும் ஒரு விடயமாகக் குறிப்பிடலாம். 

மேலும் தொடர்ந்து நட்டத்தில் இயங்கி வரும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வட்டி வீதங்கள் குறைந்துள்ளன.

அந்நியச் செலாவணிக் கையிருப்பு உயர்வடைந்துள்ளது. எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடுகள் தற்போது இல்லை. நாம் தற்போது பாரிய சவால்களை எதிர்கொண்டு அதில் இருந்து மீள்வதற்காக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

காசா அல்-ஷிஃபா மருத்துவமனையில் மின்சாரம் தடை..! நோயாளர்கள் பலர் உயிரிழக்கும் அவலம்

காசா அல்-ஷிஃபா மருத்துவமனையில் மின்சாரம் தடை..! நோயாளர்கள் பலர் உயிரிழக்கும் அவலம்

சம்பள அதிகரிப்பை பிற்போடும் ஜனாதிபதியின் யோசனை: கேள்வி எழுப்பிய சுனில் ஹந்துன்நெத்தி

சம்பள அதிகரிப்பை பிற்போடும் ஜனாதிபதியின் யோசனை: கேள்வி எழுப்பிய சுனில் ஹந்துன்நெத்தி

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 18

நன்றி நவிலல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, Scarborough, Canada

28 Aug, 2021
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, La Courneuve, France

30 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US