காசா அல்-ஷிஃபா மருத்துவமனையில் மின்சாரம் தடை..! நோயாளர்கள் பலர் உயிரிழக்கும் அவலம்
காசா மருத்துவமனையில் மின் பற்றாக்குறை காரணமாக கடந்த 2 நாள்களில் மட்டும் 24 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தகவலை அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
காசாவிலுள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையை மூன்றாவது நாளாக இஸ்ரேல் இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளனர்.
அல்-ஷிஃபா மருத்துவமனை
அல்-ஷிஃபா மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதுடன் பிறந்த குழந்தைகள் பல பராமரிக்கப்பட்டு வருகின்றன.
மருத்துவமனையிலுள்ள ஹமாஸ் படையைச் சேர்ந்தவர்களை வெளியேற்றுவதற்காக மருத்துவமனையை முற்றுகையிட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஆனால், காசா இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று இரண்டு எரிபொருள் வாகனங்களை மருத்துவமனைக்காக இஸ்ரேல் இராணுவம் காசாவினுள் அனுமதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |