இன்று முதல் ஆரம்பமாகும் நாடாளுமன்ற அமர்வுகள்.. LIVE
நாடாளுமன்றம் இன்று(19.05.2026) முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை கூடுகின்றது.
இன்று செவ்வாய்க்கிழமை மு.ப. 11.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை உண்ணாட்டரசிறை சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்துக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற விவாதங்கள்
நாளை புதன்கிழமை(20) மு.ப. 11.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை அரசாங்கக் கட்சியால் கொண்டுவரப்படும் இலங்கை மத்திய வங்கியின் 2025ஆம் ஆண்டுக்கான பொருளாதார மீளாய்வு பற்றிய அறிக்கை குறித்த ஒத்திவைப்பு விவாதம் இடம்பெறும்.
நாளைமறுதினம்(21) வியாழக்கிழமை மு.ப. 11.30 மணி முதல் மு.ப. 5.00 மணி வரை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (2481/02, 2482/08, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான ஒன்பது தீர்மானங்கள் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை(22) மு.ப. 11.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை அனுதாபப் பிரேரணைகள் மீதான விவாதம் இடம்பெறும்.
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 15 மணி நேரம் முன்
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
வீட்டுப் பிரச்சனைக்கு சிந்தாமணி தான் காரணம் என தெரிந்ததும் அதிரடி காட்டிய விஜயா... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri