இளம் குடும்பஸ்தர் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை
இரத்தினபுரி, எஹெலியகொட - பொல்வத்தை கடை சந்திப்புக்கு அருகில் நபரொருவர் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் அவிசாவளையைச் சேர்ந்த நுவன் புத்திக ராஜபக்ஷ என்ற திருமணமான 33 வயதான சுரங்கத் தொழிலாளி என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கடுமையான வெட்டுக் காயங்கள்
குற்றவாளிகள் ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட நபரின் கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான வெட்டுக் காயங்கள் காரணமாக அதிகளவில் இரத்தம் வெளியேறியுள்ளது.

அத்துடன், அவரது காலிலும் வெட்டுக் காயங்கள் காணப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 16 மணி நேரம் முன்
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
வீட்டுப் பிரச்சனைக்கு சிந்தாமணி தான் காரணம் என தெரிந்ததும் அதிரடி காட்டிய விஜயா... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam