வவுனியாவில் இன்று இரண்டாவது கோவிட் மரணம் பதிவானது!
வவுனியாவில் கோவிட் தொற்று காரணமாக 40 வயதுடைய ஒருவர் இன்றிரவு உயிரிழந்துள்ளார்.
கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையின் கோவிட் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவரே சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
வவுனியா, கற்பகபுரம் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவரே இவ்வாறு மரணமடைந்தவராவார். இதன்மூலம் வவுனியாவில் கோவிட் காரணமாக இன்று இரண்டாவது நபர் மரணமடைந்துள்ளார்.
இதேவேளை, கோவிட் மூன்றாவது அலையின் காரணமாக வவுனியாவில் இடம்பெற்ற ஐந்தாவது மரணம் இது என்பதுடன், வவுனியா வைத்தியசாலையில் இடம்பெறும் நான்காவது கோவிட் மரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி.......
வவுனியாவில் கோவிட் தொற்றால் ஒருவர் மரணம்