வவுனியாவில் கோவிட் தொற்றால் ஒருவர் மரணம்
வவுனியாவில் கோவிட் தொற்று காரணமாக ஒருவர் இன்று மாலை உயிரிழந்துள்ளார்.
கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையின் கோவிட் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் சிறுநீரக நோய் காரணமாக கடந்த சில நாட்களிற்கு முன்பாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கோவிட் தொற்று பீடித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து வைத்தியசாலையின் கோவிட் விடுதியில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் கிடாச்சூரி பகுதியை சேர்ந்த 60 வயது முதியவரே
மரணமடைந்துள்ளதுடன், இவரது
மரணத்துடன் வவுனியா வைத்தியசாலையில் மூன்றாவது கோவிட் நோயாளி மரணமடைந்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.