எக்ஸ் பிரஸ் பேர்ல் கப்பலின் பதிவுக்கருவியை தேடும் நடவடிக்கை தீவிரம்
எம்.வி எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலின் Data Recorder என்ற பதிவுக்கருவியை தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கப்பல் தலைவர், மற்றவர்களுடன் மேற்கொண்ட உரையாடல்களை அறிய இந்த பதிவுக்கருவி பயன்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இலங்கையை விட்டு வெளியேறுவதில் இருந்து தடுக்கப்பட்டுள்ள, கப்பலின் தலைவர் மற்றும் குழுவினரிடம் தீ விபத்து தொடர்பாக தற்போது குற்றவியல் விசாரணை இடம்பெற்று வருகிறது.
இதேவேளை, கப்பல் இலங்கை கடலுக்குள் நுழைந்து துறைமுகத்திற்கு வெளியே நங்கூரமிட்ட பின்னரே சில சரக்குகளில் கசிவு ஏற்பட்டதாக இலங்கைக்கு அறிவிக்கப்பட்டதாக கொழும்பு துறைமுக தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
சரக்கு கசிந்ததன் விளைவாக தீ ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.கப்பல் இப்போது பெரும்பாலும் நீருக்கடியில் சென்றுள்ள நிலையில் எண்ணெய் கசிவு பற்றிய அச்சங்கள் எழுந்துள்ளன.
எனினும் பெரும்பாலான எண்ணெய் தீயில் எரிந்திருக்கலாம் என்றும் கருதப்படுவதாக கொழும்பு துறைமுக தரப்புக்கள் தெரிவிக்கின்றன.