யாழ்ப்பாணத்தை மையமாக வைத்து கடல்வழி பயண சேவை (Video)
சுற்றுலாத்துறையை விருத்தி செய்யும் நோக்கில் இதுவரை காலமும் இல்லாத கடல்வழி பயண சேவையொன்று யாழ்ப்பாணத்தை மையமாக வைத்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக தொழிலதிபர் சுப்பிரமணியன் மனோகரன் (Subramanian Manokaran) தெரிவித்துள்ளார்.
குறித்த சேவை தொடர்பில் தெளிவுபடுத்தும் விசேட ஊடக சந்திப்பு யாழ். ஊடக மையத்தில் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எட்டுப் பேர் தங்கக்கூடிய நான்கு அறைகளைக் கொண்ட பாய்க்கப்பல் வடிவிலான இயந்திர ரக கப்பலில் ஒருநாள் மற்றும் சில நாட்கள் கடலில் பயணிக்கக்கூடிய வகையில் இந்த சேவை பரீட்சார்த்தமாக டிசம்பர் 5ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
காரைநகரில் இருந்து இதனை இந்த மாதத்தில் ஆரம்பிக்க இருந்தோம். காலநிலை மாற்றம் காரணமாக டிசம்பர் மாதம் 5ம் திகதியிலிருந்து டிசம்பர் மாதம் 10ம் திகதி வரை பரீட்சார்த்தமாக ஆரம்பிக்கவுள்ளோம்.
இதன் மூலம் அந்நியச் செலாவணி அதிகரித்து நாட்டிற்கு வருமானம்
ஈட்டப்படுவதுடன் உள்ளூர்வாசிகளும் இதன் மூலம் பயன்பெறுவர் என தெரிவித்துள்ளார்.

விமானங்களில் இருந்து தப்பித்து எதிரிப் பகுதிக்குள் விழும் விமானிகள் ஏன் தாக்கப்படுவதில்லை? News Lankasri
