அவசரமாக தரையிறக்கப்பட்ட ஸ்கொட்லாந்து விமானம்
ஸ்கொட்லாந்தின் (Scotland) கிளாஸ்கோவிலிருந்து துருக்கிக்கு (Turkey) புறப்பட்ட பயணிகள் விமானம் புறப்பட்ட 45 நிமிடங்களுக்குள் மற்றுமொரு விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
குறித்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர், குடிபோதையில் இருந்துள்ளதுடன் தனது மதுபான போத்தலை விமானப் பணியாளர்களிடம் ஒப்படைக்க மறுத்துள்ளார்.
குறித்த சம்பவமானது, நேற்று மாலை 5.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
திட்டமிடப்படாத நேரம்
இந்நிலையில், அந்த இடத்தில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, 45 நிமிடங்களுக்குள், நியூகேஸில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் திட்டமிடப்படாத வகையில் விமானத்தை தரையிறக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், விமானம் தரையிறக்கப்பட்டதும், பொலிஸ் அதிகாரிகள், குறித்த பயணியை விமானத்தில் இருந்து வெளியேற்றியுள்ளனர்.
எனினும், இந்த சம்பவம் காரணமாக நூற்றுக்கணக்கான பயணிகள் விரக்தியடைந்துள்ளதுடன் விமானம், திட்டமிட்டதை விட ஐந்து மணி நேரத்திற்குப் பின்னரே உரிய இடத்தில் தரையிறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |