அரச வரி வருவாயில் ஏற்பட்ட குறைவு : மீண்டும் நிர்ணயிக்கப்பட்ட சவால்மிக்க இலக்கு
இலங்கை (Sri Lanka) நாடாளுமன்றக் குழுவின் புதிய அறிக்கையின்படி, வழிகள் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த 2023 ஆம் ஆண்டிற்கான அரச வரி வருவாயில் குறைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
இதன்படி அரசாங்கம் அதன் எதிர்பார்த்த வரி வருவாய் இலக்கு கணிசமான வித்தியாசத்தில் குறைந்து விட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பற்றாக்குறை
அரசின் ஆரம்ப கணிப்புகள் 3,104 பில்லியன் ரூபாய் வருவாயை முன்னறிவித்துள்ளன எனினும் 2023இல், 2,695 பில்லியன் ரூபாயை மாத்திரமே அறிவிட முடிந்துள்ளது.
இதில் இலங்கை சுங்கத் திணைக்களம் மிகப்பெரிய பற்றாக்குறையை பதிவு செய்துள்ளது
இந்த துறை மாத்திரம் எதிர்பார்த்த வருவாயில் 246 பில்லியன் ரூபாயை சேகரிக்கத் தவறியுள்ளது.
இந்தநிலையில் 2024 ஆம் ஆண்டில் வரி வருவாய்க்காக 3,789 பில்லியன் ரூபாய் என்ற இலக்கை அரசு நிர்ணயித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |