கிராம மக்களை தாக்கிய தேள்கள்
எகிப்தில் அஸ்வான் மாகாணத்தில் கிராமம் ஒன்றில் வசிக்கும் மக்களை தேள்கள் தாக்கியுள்ளதாக சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக தேள்கள் கிராமத்தில் உள்ள வீடுகளுக்குள் சென்றுள்ளன. இதன் காரணமாக தேள்கள் கொட்டியதில் 400 கிராமவாசிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு உடனடியாக சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும் தேள்கள் கொட்டியதால், எவரும் மரணிக்கவில்லை எனவும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு விஷ முறிவு மருந்து கொடுக்கப்பட்டதாகவும் எகிப்து சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
எகிப்தின் அன்வான் மாகாணத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கானவர்கள் இருப்பிடங்களை இழந்துள்ளனர். பாடசாலைகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அந்த மாகாணத்தின் ஆளுநர் அஷ்ரப் ஆட்டியா குறிப்பிட்டுள்ளார்.