கொரோனாவை அழிக்க வருகிறது ”சுவிங்கம்”
கொரோனா வைரஸை கொல்லும் “சுவிங்கம்” ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் தயாரிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில், அதனை கட்டுப்படுத்தும் வழிகள் குறித்த ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கொரோனா வைரஸை கொல்லும் ‘சுவிங்கம்’வை தயாரிக்கும் முயற்சியில் அமெரிக்க விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்கா பென்சில்வேனிய பல்கலைக்கழகத்தின் ஆய்வதிகாரி ஹென்றி டேனியல் Hentry Deniell தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ், மனிதர்களின் உமிழ்நீர் சுரப்பிகளில் பெருக்கமடைகிறது. இந்தநிலையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஒருவர், தும்மும்போது, இருமும்போது, பேசும்போது வைரஸ் அவர் வாயிலிருந்து வெளியேறி மற்றவர்களை அடையக்கூடும்.
இந்தநிலையில் புதிய சுவிங்கம், கொரோனா வைரஸ் உருவாகும் இடத்திலேயே அதனை அழித்து விடும் என்று ஹென்றி டேனியல் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக, தாவரத்தில் இருந்து பெறப்படும் ‘ஏசிஇ2’ ACE2 என்ற புரதம் பயன்படுத்தப்படுகிறது.
தற்போது, கொரோனா நோயாளிகளின் உமிழ்நீர் மாதிரியில் இதனை பரிசோதித்தபோது அது நல்ல பலனை கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.