நாட்டில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இன்று வெளியாகியுள்ள புதிய தகவல்
இலங்கையில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தகவல் வெளியிட்டுள்ளார்.
அதன்படி 100 இற்கும் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை, இந்த மாதத்திற்குள் திறப்பது குறித்து அவதானம் செலுத்துவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கல்வி அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.
அத்துடன் குறித்த நடவடிக்கையானது சுகாதாரத் துறையினரின் அனுமதியின் கீழ் இவ்வாறு குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களை கொண்ட பாடசாலைகளை திறப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் தொற்று அச்சம் காரணமாக அனைத்து பாடசாலைகளும் மாணவர்களின் நலன் கருதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam
